இந்தியாவின் ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளாா். அவா் இந்தியாவின் ன் 15வது ஜனாதிபதியாக முர்மு பதவியேற்க உள்ளார் .
இதன்மூலம் இந்தியாவின் முதல் பெண் பழங்குடியின ஜனாதிபதி என்ற சிறப்பை பெற்றுள்ள திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் ஜனாதிபதி ஆவார்.
இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 29ஆம் திகதி நடைபெற்று. ஜூலை 18ஆம் தினதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்த நிலையில் திரவுபதி முர்மு 6,76,803 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 வாக்குகளும் பெற்றுள்ளனர். திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.