178
நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (22) காலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை வழங்குமாறும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Spread the love