163
வெடிபொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் , வெடி பொருள் ஒன்றினை தவறாக கையாண்ட பொழுது அது வெடித்ததில் , படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகமாலை பகுதியை அண்டிய பிரதேசத்தில் வெடி பொருட்களை அகற்றும் பணியில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகின்றது. அதில் பணி புரியும் நபர் ஒருவர் வெடி பொருள் ஒன்றினை அகற்ற முற்பட்ட போது , அது வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love