கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று(28) பிரித்தானியாவின் பேர்மிங்காம் நகரில் ஆரம்பமாகின்றது. பொதுநலவாய (கொமன்வெல்த் ) அமைப்பின் உறுப்பு நாடுகளும் அதனை சார்ந்த பிராந்தியங்களுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியே கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி’என அழைக்கப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கொமன்வெல்த் போட்டியில் இந்த ஆண்டு 72 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் தடகளம், பட்மின்டன், `ஹொக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன. சுமார் 6,500 வீரர்கள் மற்றும் குழு நிர்வாகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்வர். இன்று ஆரம்பமாகும் கொமன்வெல்த் போட்டி ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது
இந்த ஆண்டின் கொமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக பெண்கள் கிரிக்கெட் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது