166
யாழ்ப்பாணம் தொண்டமானாறு கடற் பகுதியிலே திடீரென்று இறந்த நிலையில் பல மீன்கள் மிதந்து வருகின்றன.
குறித்த பகுதியில் தற்போது நீர் வற்றிய நிலையில் காணப்படும் அதேவேளை நேற்றைய தினம் பெய்த மழையின் காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என தெரிய வருகிறது.
குறித்த மீன்களை கருவாட்டு தேவைகளுக்காக சில மீனவர்கள் எடுத்து செல்வதனையும் அவதானிக்க முடிந்தது. இருப்பினும் மீன்கள் ஏன் இறந்தன? என்பது தொடர்பில் அறிய முடியவில்லை.
Spread the love