189
அடக்குமுறைக்கு எதிரான மக்கள் பேரணி என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று மாநாடு ஒன்று நடைபெற்றது.
காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் பங்குபற்றலுடன் இந்த மாநாடு நடைபெற்றது.
இதன்போது, நான்கு அம்ச கோரிக்கைகள் அடங்கிய கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது.
- ஜனநாயக விரோத கைதுகள், கடத்தல்கள் மற்றும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறும்
- அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட சட்டங்களை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் எனவும்
- அடிப்படை மனித உரிமைகளை உடனடியாக பாதுகாக்க வேண்டும் எனவும்
- பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்
அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டறிக்கையில் பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதன்போது, அடக்குமுறைக்கு எதிராக தேசிய அளவில் கண்டன பேரணியை நடத்தவும் ஒன்றிணைந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.
Spread the love