189
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனத் தூதுவர் சி ஷெங்ஹாங் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தில் சீனா அங்கத்துவம் பெற்றுள்ளதால், தாம் இந்த ஆதரவை வழங்கவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு சீனா வழங்கும் ஆதரவை பாராட்டிய பிரதமர், நீண்ட கால தீர்வாக, நேரடி தனியார் முதலீடுகள் மற்றும் விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கைத்தொழில் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் முதலீடுகளை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Spread the love