165
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 6 பேரை குற்றப்புலனாய்வுத் துறையினா் கைது செய்துள்ளனர். சுங்க வரி செலுத்தாது தொலைபேசிகள் மற்றும் தங்க நகைகளை நாட்டுக்குள் எடுத்து வர முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 கிலோ 158 கிராம் தங்கமும் 39 தொலைபேசிகளும் அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்டவா்கள் அகுரன, நீர்கொழும்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love