தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 14 இலங்கையர்கள் இந்தியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில், கேளம்பாக்கம் அருகே தையூரில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்பு, தேசிய புலனாய்வு முகமை நடத்திய திடீர் சோதனையில் ஒரு குழுவிடம் இருந்து 60 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 50 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
திருச்சி மத்திய சிறைக்கு அருகில் உள்ள வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமில் கடந்த ஜூலை 20ஆம் திகதி என்ஐஏ குழுவினர் சோதனை நடத்தினர்.
போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 14 இலங்கையர்களை இந்தக் குழு விசாரித்தது.
சோதனையின் போது, என்ஐஏ குழு 60 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 50 சிம் கார்டுகளுடன் ஒரு மடிக் கணினியையும் கைப்பற்றியிருந்தனர்.
முகாமில் உள்ள குறைந்தபட்சம் 14 கைதிகள் பாகிஸ்தானில் இருந்து கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறி;பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த கைதிகள் இந்தியாவிலும் இலங்கையிலும் இயங்கி வருவதாகவும், விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்காக செயற்படுவதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.