கியூபாவில் மின்னல் தாக்கியதால் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்ததில் அங்கிருந்த 121 பேர் படுகாயம் அடைந்துள்ளதுடன் 17 போின் நிலை தொடா்பான தகவல்கள் தொியவில்லை எனத் தொிவிக்கப்படுகின்றது
கடந்த வெள்ளிக்கிழமை . 26 ஆயிரம் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட எண்ணெய் கொள்கலனில் மின்னல் தாக்கி தீ பற்றி எரிந்ததனால் அப்பகுதி புகை மண்டலம் போல் காட்சி அளித்தது.
எண்ணெய் கிடங்கின் ஒரு கொள்கலனில் பற்றிய தீ அப்படியே அருகில் இருந்த மற்றொரு கொள்கலனிற்கும் பரவியது. அதில் சுமார் 50 ஆயிரம் கன மீட்டர் கொள்ளளவு எண்ணெய் இருந்ததால், தீ கொழுந்து விட்டு எரிந்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினா் தீயை அணைக்க போராடினர். ஹெலிகொப்டர்கள் மூலமும் தீயை அணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் தீயில் சிக்கி ஒருவர் உயிாிழந்துள்ளதுடன் 121 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் தீயணைப்பு வீரர்கள் 17 போின் நிலை தொடா்பான தகவல்கள் தொியவில்லை எனத் தொிவிக்கப்படுகின்றது
காயம் அடைந்தவர்களின் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதனால் உயிாிழப்புகள் அதிகரிக்க்குமென்று அஞ்சப்படுகிறது
ஒரு லட்சத்து 40 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட மடான்ஸ் நகரம் முழுவதும் எண்ணெய் கிடங்கில் தீ பற்றியதன் தாக்கம் தென்பட்டது. வானம் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. மக்களுக்கு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. வெடிகுண்டு வெடித்தது போல அதிகாலை நேரங்களில் சத்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
எண்ணெய் கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்க மேலும் சில நாட்கள் ஆகக்கூடும் என்றும் கியூபாவில் இதற்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் கிடங்கில் நிறுவப்பட்டு இருந்த மின்னல் கம்பி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து கியூபாவுக்கும் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது