222
பல பொது அமைப்புக்கள் – அரசியல் கட்சிகள் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நாளை நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு காவற்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கறுவாத்தோட்ட காவற்துறையினரின் கோரிக்கையை இன்று கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நிராகரித்துள்ளார். எவ்வாறாயினும் ஆர்ப்பாட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க காவற்துறையினருக்கு அதிகாரம் உள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.
Spread the love