209
நாளை ஓகஸ்ட் 10ம் திகதி முதல் மின்கட்டணத்தை 75 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, முதல் 30 அலகுகளுக்கு 264 வீதத்தாலும் 31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 211 வீதத்தாலும் 61 முதல் 90 வரையான அலகுகளுக்கு 125 வீதத்தாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
91 முதல் 120 அலகுகள் வரை 89 வீதத்தாலும் 121 முதல் 180 அலகுகள் வரையான மின் பாவனைக்கு 79 வீதத்தாலும் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
Spread the love