பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் முதலாளிமார் சம்மேளத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
1000 ரூபாய் சம்பளம் வழங்கும் அரசாங்கத்தின் யோசனையை ரத்து செய்யக் கோரி கடந்த மார்ச் 2021 இல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் , முதலாளிகள் சம்மேளனம் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவே, இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாளொன்றுக்கு சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை 22 கம்பனிகளும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.