அமெரிக்க முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ஓய்வு குறித்த முடிவை அறிவித்துள்ளாா். . 40 வயதான இவர் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் உலகின் ஜாம்பவானாக வலம் வருகிறார்.
4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ள அவா் அமெரிக்க ஓபன் தொடருக்கு பின்னா் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் தொடரில் பங்கேற்ற பின்னா் தனது வாழ்க்கையில் முக்கியமான பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்த உள்ளதாக தொிவித்துள்ள அவா் இந்த ஆண்டு அமெரிக்க ஓபனை வெல்ல முயற்சிப்பேன் எனவும் தொிவித்துள்ளாா்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ” வாழ்க்கையில் அனைவருக்கும் எப்போதாவது வேறு திசையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதுவும் நமக்கு பிடித்தமான ஒன்றை விட்டு விலக வேண்டியிருக்கும். அந்த சூழல் தற்போது எனக்கும் வந்துள்ளது. கடினமாக இருந்தாலும், தற்போது டென்னிஸை விட்டு விலகி தான் ஆக வேண்டும்.
அடுத்தகட்டமாக நான் ஒரு சிறந்த தாயாக இருப்பதில் கவனம் செலுத்த போகிறேன். சில வருடங்களுக்கு முன்பு செரீனா வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித். பின்னர் எனக்கென்று ஒரு குடும்பம் ஆனது. எனவே இனி அதில் மட்டும் கவனத்தை செலுத்தப்போகிறேன் என செரீனா தொிவித்துள்ளாா்.