பீமா-கோரேகான் வன்முறைச் சம்பவம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
82 வயதான வரவர ராவின் முதுமை மற்றும் உடல்நிலை மோசமடைந்ததை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள பீமா கோரேகான் நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.
வரவர ராவ் பேச்சால் உந்துதல் ஏற்பட்டு, வன்முறையாளர்கள் கலவரம் செய்ததாக காவல்துறை சந்தேகித்து அவரை கைது செய்தனர்.
அதே நாள் வழக்கறிஞரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், சிவில் உரிமைகள் செயல்பாட்டாளர் கவுதம் நவ்லங்கா, சுதிரா தவாலேவுக்காக வழக்கில் முன்னிலையான வழக்கறிஞர் மற்றும் உரிமைப் போராளி அருண் பெரைரா, எழுத்தாளரும் உரிமை செயல்பாட்டாளருமான வெர்னான் கோன்சால்வ்ஸ் ஆகியோரும் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது