அனைத்து கட்சிகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல தரப்பினருடன் நேற்று (10.08.22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய பேரவையை ஸ்தாபிப்பதே பிரதான இலக்கு என சுட்டிக்காட்டிய அவர், அதற்கு சகல கட்சிகளின் பிரதிநிதித்துவமும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
குழு அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதா அல்லது அரசாங்கத்துடன் இணைவதா என்பதை அந்தந்த தரப்பினர் கலந்துரையாடி தீர்மானித்ததன் பின்னர் தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.