சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே யானைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச்சூழல் கழகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச்சூழல் கழகத்தின் தலைவர் ம.சசிகரன், யானைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்கு தெளிவூட்டினார். அத்துடன் யானை உருவங்களை அணிந்து பாடசாலை மாணவ மாணவிகள் விழிப்பூட்டும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் கு.திலீபன், ஆசிரியர்கள் , மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
யானைகளைப் பாதுகாக்கவும், சட்டவிரோதமான முறையில் யானைகளை வேட்டையாடுதலை தடுக்கவும் சர்வதேச யானைகள் தினம் ஆகஸ்ட் 12 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.