150
இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தலைமையிலான மத்திய சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவொன்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளது.
வைத்தியசாலையின் பகுதிகளை பார்வையிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள் வைத்தியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
Spread the love