புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள், தனிநபர்கள் சிலர் மீதான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட புலம்பெயர் குழுக்களான ஜீ.ரீ.எவ் என்ற உலகத்தமிழர் பேரவை, பீ.ரீ.எவ் என்ற பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியனவும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி மூலம் பட்டியல் நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் பின்னர் கோட்டாபய ராஜபக்ச நிர்வாகமும் தமிழ் குழுக்களை தடை செய்திருந்தது.
மேலும், சில புலம்பெயர் குழுக்களின் மீதான தடையை அரசாங்கம் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.