140
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று (16.08.22) இலங்கையை சென்றடைந்தார்.
டேவிட் மெக்லாக்லன்-கார் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்க, எதிர்க்கட்சி, சிவில் மற்றும் இராஜதந்திர தரப்பினரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டு அரச மற்றும் சிவில் சமூக குழுக்களை சந்திக்கவுள்ளார்.
Spread the love