174
அரச நிறுவனங்கள் பலவற்றை தனியார் மயப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டி ஒன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை விமான சேவை நிறுவனம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகிய அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படலாம் எனவும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
.
Spread the love