விசா இரத்து செய்யப்பட்டுள்ள பிரித்தானிய பெண் Kayleigh Fraser-ஐ காணவில்லை எனவும், அவரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
தன்னை இலங்கையிலிருந்து நாடு கடத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு கோரி Kayleigh Fraser தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
காரணத்தை முன்வைக்காமல், விசாவை இரத்து செய்வதற்கோ அல்லது விசா காலத்தை நிறைவு செய்வதற்கோ குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அதிகாரம் உள்ளமை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
போராட்டக்களம் தொடர்பில் சமூக வலைத்தளத்தினூடாக தகவல்களை பகிர்ந்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட குறித்த பிரித்தானிய யுவதியின் விசாவை இரத்து செய்ய குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில், விசா இரத்து செய்யப்பட்டுள்ள பிரித்தானிய யுவதியை காணவில்லை என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.