காவல்துறையினரினால் கைதான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகளின் அடிப்படையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரை பிடிப்பதற்காக அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று ( 18.08.2022 ) வியாழக்கிழமை கைதானார்.
இதன் போது நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த மருதமுனையைச் சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் கைதானதுடன் வசம் 1200 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனர்.