145
சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காகவே இவ்வாறு அவருக்கெதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வீதியில், பொல்துவ சந்திக்கு அருகில் கடந்த ஜூலை 13 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பெத்தும் கேர்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னா் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love