Home இலங்கை இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டை, சுறா மீன் துடுப்பு பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டை, சுறா மீன் துடுப்பு பறிமுதல்

by admin



 பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் சர்வதேச மதிப்பு 50 கோடி ரூபாய்  


 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே புளித்தோப்பு கடற்கரை பகுதியில் இருந்து  இலங்கைக்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் சுறா மீன் துடுப்புகளை ஒரு நாட்டு படகில் ஏற்றி தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதாக கியூ பிரிவு காவல்துறையினருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற கியூ பிரிவு காவல்துறையினர்  கடல் அட்டை மற்றும் சுறா மீன் துடுப்புகளை பறிமுதல் செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு நாட்டுப் படகு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் சர்வதேச மதிப்பு 50 கோடி ரூபாய்   என தெரிவித்துள்ள காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More