195
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மீனவர்களின் வாடிக்கு விஷமிகள் தீ வைத்தமையால் வாடியில் இருந்த சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான வலைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் பளை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், முற்பகை காரணமாகவே வாடிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக காவற்துறைத் தரப்பு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை பளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love