173
யாழ்ப்பாணத்தில் 8.5 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நயினாதீவு பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே யாழ்.நகர் மத்தி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த நபர் நயினாதீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா போதை பொருளை எடுத்து வந்து , யாழ்ப்பாணம் – கொழும்பு பேருந்தில் கொழும்புக்கு கடந்த முற்பட்டதாக தெரியவந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love