165
இலங்கைக்கு ஆதரவாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் என சீனா தெரிவித்துள்ளது.
தற்போதைய சிரமங்கள் மற்றும் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையின் பதிலளிப்புக்கு தொடர்ந்தும் சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கு தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயார் நிலையில் உள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் தொடர்பில் சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
Spread the love