பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக ஆகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருமாக லிஸ் டிரஸ் தொிவு செய்யப்பட்டுள்ளாா். பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பதவி விலகுவதாக அறிவித்தபின் தங்கள் அடுத்த பிரதமரை தேர்ந்தடுக்கும் பணிகளை கன்சர்வேட்டிவ் கட்சியினர்ஆரம்பித்திருந்தனா்.
பல்வேறு கட்டங்களாக நடந்த வாக்கெடுப்பில் முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகிய நிலையில் லிஸ் டிரஸ் 81,000 க்கு மேல் வாக்குகளையும் ரிஷி சுனக் 60,000க்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளார்.
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான இறுதி சுற்றில் கன்சர்வேட்டிவ் மொத்தமுள்ள இரண்டு இலட்சம் உறுப்பினர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளை பெற்ற லிஸ் ட்ரஸ் இன்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவர் நாளை (செவ்வாய்க்கிழமை பிரதமராக பதவியேற்பார்.
ட்ரஸ் பதவியேற்றவுடன் எண் 10 க்கு வெளியே ஒரு உரையை நிகழ்த்துவார் எனவும் அதனையடுத்து அவரது அமைச்சரவையை நியமிப்பாா் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
47 வயதான லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம், மார்கரெட் தட்சர், தெரசா மேவுக்கு அடுத்ததாக மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நாளை செவ்வாய்க்கிழமை பொரிஸ் ஜோன்சன் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரான லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் அதிகாரத்தை, அதிகார பூர்வமாக ஒப்படைப்பதற்காக ராணியை சந்திக்க பால்மோரலுக்கு செல்வார்கள் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது