பாகிஸ்தானில் வௌ்ளப்பெருக்கு நிலைமை அதிகரித்தமையைத் தொடர்ந்து, நாட்டிலுள்ள மிகப்பெரிய குளமொன்று உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிந்த் மாகாணத்திண் மான்சர் குளம் (Manchar Lake) பெருக்கெடுத்துள்ள நிலையில், உடைப்பெடுக்கும் அபாய நிலை காணப்படுவதாக பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மான்சர் குளத்தின் அணைச்சுவரின் ஒரு பகுதி உடைப்பெடுத்துள்ள நிலையில் குறித்த குளத்தை சூழவுள்ள ஒரு இலட்சம் பேர் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 33 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 458 சிறுவர்கள் உள்ளிட்ட 1,314 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ முகவரகம் தெரிவித்துள்ளது.
சிந்த் மாகாணத்திலிருந்தே நாட்டிற்கு தேவையான அரைவாசி உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், வௌ்ள நிலை காரணமாக எதிர்காலத்தில் பாரிய உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்க நேரிடும் என பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.