Home இலங்கை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ஒருவருக்கு பிணை – 29 பேருக்கு விளக்கமறியல்!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ஒருவருக்கு பிணை – 29 பேருக்கு விளக்கமறியல்!

by admin

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த ஒருவரை பிணையில் விடுவித்ததுடன் 29 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று (06.09.08) திகதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் அம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 69 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி காவற்துறையினர் வழக்கு தாக்குல் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்னர்.

இதில் சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றில் இருந்து மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 11 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதுடன் 25 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் 30 பேர் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, பதுளை, மொனராகலை திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய சிறைச்சாலைகளில் அடைக்கப்படவர்களை நீதிமன்றில் அழைத்துவரப்பட்டு நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து ஒருவரை பிணையில் விடுவித்ததுடன், நீதிமன்றிற்கு தற்போதைய நாட்டின் எரிபொருள் சூழ்நிலை காரணமாக அழைத்து வரமுடியாமல் போன கைதிகள் தொடர்பாக இணைய கணொளி மூலம் வழக்கு இடம்பெற்றதை அடுத்து ஏனைய 29 பேரையும் எதிர்வரும் 20 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More