பிரித்தானியாவின் புதிய பிரதமர் லீஸ் ட்ரஸின் அமைச்சரவையில் இலங்கையை பூா்வீகமாகக் கொண்ட ரணில் ஜெயவர்தன என்பவா் சுற்றுச்சூழல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான திணைக்களத்தை வழிநடத்தும் அதேவேளையில், உணவு மற்றும் விவசாயக் கொள்கைகளுக்கு இவர் பொறுப்பாகவும் இருப்பார்.
முன்னதாக சர்வதேச வர்த்தகத் துறையில் கனிஸ்ட அமைச்சராக இருந்த ரணில் ஜெயவர்தன, புதிய பிரதமா் டிரஸின் ஆரம்பகால ஆதரவாளராக செயற்பட்டு வந்துள்ளாா்.
1986 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் பிறந்த ரணில் ஜயவர்தன, இலங்கையைச் சோ்ந்த நளின் ஜெயவர்தன மற்றும் இந்தியத் தாய்க்கு மகனாவாா். என்பது குறிப்பிடத்தக்கது