ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டத்தரணி நுவன் போபகே இன்று ஜெனிவா புறப்பட்டுச் சென்றார்.
நீண்ட காலமாக தமது சங்கத்தின் சட்ட ரீதியான பணிகளில் ஈடுபட்டமை, காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக ஜெனிவா அமர்வில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் நுவான் போபகேவிற்கு கிடைத்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மீதான அடக்குமுறை குறித்து அவர் சர்வதேசத்தை தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.