இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்காக, 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு சென்றுள்ள அவா் ஜாஎலவில் உர பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையிலேயே அவர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியானது, அடுத்த அறுவடை காலத்தில் விவசாயிகளுக்குத் தேவையான விவசாயத் தேவைகள் மற்றும் உரங்களை உரிய நேரத்தில் பெறுவதற்கும் அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு வழங்குவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளாா்.
இதேவேளை, ,இலங்கையிலுள்ள 1 மில்லியன் விவசாயிகளுக்கு உரம் தேவைப்படுவதாகவும் அவர்களில் 53,000 பேருக்கு அவசர நிதியுதவி தேவைப்படுவதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.