145
காவல்துறை திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை சேவையில் இருந்து ஓய்வு பெற்ற உத்தியோகஸ்தர் கசிப்பினை உடைமையில் வைத்திருப்பதாக யாழ்.மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டதுடன் , அவரிடம் இருந்து ஒரு தொகை கசிப்பும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட நபர் கோப்பாய் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Spread the love