உணவுக் கையிருப்புப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்காகக் கிராமியப் பொருளாதாரப் புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகைத் துறைசார் ஒருங்கிணைந்த பொறிமுறையினை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் புதன்கிழமை காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குத் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைந்த பொறிமுறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குத் தொடர்பான பிரதேச ஒருங்கிணைந்த பொறிமுறை, கிராமியப் பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையம் போன்ற பொறிமுறைகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் செ.நிக்கொலஸ்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன்
இணையவழி மூலம் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜே.ஜி.எல். சுலக்சன, லெப்டினன்ட் கேணல் ஆதித்ய மென்டிஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். அத்தோடு பல்வேறு திணைக்கள, பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.