யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகியுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனையின் போது , சிறுமி 08 மாத கர்ப்பமாகியுள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி போதைப்பொருளினை பெற்றுக்கொள்வதற்காக பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபட்டமையினால் தான் கர்ப்பம் தரித்தார் என தெரியவருகிறது.