159
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 77 வது அமர்வில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள், அதனால் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அந்த சவால்களை சமாளிக்க இலங்கை அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்தியதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது ஐ.நாவின் உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love