கொழும்பு தொட்டலங்க, கஜிமாவத்தை பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 தற்காலிக குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர தீயணைப்பு திணைக்களம் மற்றும் கடற்படையின் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டநிலையில் இந்த தீ விபத்தில், உயிர்ச்சேதமோ எவருக்கும் காயமோ ஏற்படவில்லை எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் களனி நதீ விகாரை மற்றும் முவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு சனசமூக மண்டபத்தில் தற்காலிக தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கிராண்ட்பாஸ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்