சிறுவராக இருக்கும் ஒருவரின் வயது 16 லிருந்து 18 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று இளைஞர்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயின் தலைமையிலான பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான குழுவினால் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ‘இளைஞர்கள்’ என்ற குறிப்பைத் தவிர்க்கவும் முதன்மைச் சட்டத்தை சிறுவர்கள் கட்டளைச் சட்டம் என்று மறுபெயரிடவும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்புக்காக சிறுவர் நீதிமன்றங்களை நிறுவுவதற்கான உத்தரவுகளை உருவாக்குவதற்காகவே இந்த முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.