157
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர்களுக்கு அதன் பணிப்பாளர் சபை எப்போது அங்கீகாரம் வழங்கும் என உறுதியாக கூற முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
கடனாளர்களுடனான பேச்சுவார்த்தையின் வெற்றியைப் பொறுத்து காலம் தீர்மானிக்கப்படும் என அந்த நிதியத்தின் பிரதிநிதியொருவர் கூறியுள்ளார்.
எவ்வாறிருப்பினும் ஊழியர்கள் மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர்களுக்கு இந்த ஆண்டு டிசெம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love