140
மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர பேரணி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எதிர்வரும் ஒக்டொபர் 02ஆம் திகதியாகும். அதனை முன்னிட்டு, யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்திய சாலை முன்பாக உள்ள காந்தி சிலையில் முன்றலில் இருந்து, வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி வரை துவிச்சக்கர வண்டி பேரணி சென்றது.
யாழ் இந்திய துணைத் தூதுவரின் பங்கு பற்றுதலோடு மும்மதத் தலைவர்களின் ஆசியோடு இந்த பேரணி ஆரம்பமானது.
Spread the love