131
தீக்காயங்களுக்கு உள்ளாகி 06 நாட்களாக யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி நாகர் கோவில் பகுதியை சேர்ந்த கிங்ஸ்லி தனுசியா (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 24ஆம் திகதி தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love