போராட்டத்தை வழிநடத்தியவர்களை கைது செய்வதுடன் , அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று மேற்கொள்வது அவசியம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வெலிமடை நுகதலாவையில் நேற்று (30) நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சி மறுசீரமைப்பு கூட்டங்களில் கலந்துகொண்ட நாமல் ராஜபக்ஸ கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தொிவித்துள்ளாா்
போராட்டக்காரர்களுக்கு புனர்வாழ்வு பணியகங்களை அமைக்கும் திட்டம் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நாமல் , போராட்டத்துடன் தொடர்புடைய அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அவர்களை சிறையில் தடுத்து வைத்து குறைந்தபட்சம் வேலையொன்றை பெற்றுக்கொள்ள முடியாதவாறான சூழலை ஏற்படுத்துவது பிழையான விடயமாகும் எனத்தெரிவித்துள்ளார்.