ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு நோய் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, பதவிகள் இன்றி வாழமுடியாத நோய் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க அதிகாரத்தில் இருந்தாலும் அவ்வாறானவர்களுக்கு பதவி இல்லாமல் இருக்கமுடியாது என்றும் மைத்திரிபால சிறினே குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் கீழே விழுந்து தலையைத் தூக்கிய தலைவர்கள் என்று தெரிவித்த அவர், எதிர்வரும் தேர்தலின் போது, ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் இல்லாதவர்களுக்கு வேட்பு மனுக்களை கொடுப்பது கட்சியின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.