யாழ்ப்பாணம் மானிப்பாயில் வீதியில், ஆசியர் ஒருவரை வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி நான்கரை பவுண் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் கடந்த 1ஆம் திகதி வீடு திரும்பிய போதே வழிப்பறி கொள்ளை கத்திமுனையில் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு முன்னெடுத்த நடவடிக்கையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஊரெழு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23, 25 மற்றும் 42 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய சந்தேக நபர்கள் மூவரும் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் , சந்தேக நபர்களிடமிருந்து நான்கரை தங்கப்பவுண் சங்கிலி மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.