மினுவங்கொட கமகெதர பிரதேசத்தில் வீடொன்றுக்குள் துப்பாக்கியுடன் புகுந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தையும் இரண்டு மகன்மார்களும் கொல்லப்பட்டுள்ளனா்.
51 வயதான தந்தையும் 24 மற்றும் 23 வயதுகளான மகன்மார் இருவருமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனா்.
மோட்டார் சைக்கிள் மற்றும் காரொன்றில் வந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று , நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த பட்டம் தொடர்பிலான சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என காவல்துறையினாத் தொிவித்துள்ளனா்