190
ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் பெண் உள்பட மூவர் நெல்லியடி காவல்துறையினரினால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரணவாய் பகுதியில் போதைப்பொருளுடன் நடமாடிய போதே 30 வயது பெண்ணும் 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர் எனவும், சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 20 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறினர்.
இளைஞரில் ஒருவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்றும் மற்றைய இளைஞரும், பெண்ணும் கரணவாய் – சமரபாகு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறையினர் கூறினர்.
Spread the love