250
மரம் அரியும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று மர ஆலைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பெரிய நீலாவணை காவல்துறையினா் குறிப்பிட்டனர்.
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட வீசி வீதியின் குறுக்கு வீதியாக அமைந்துள்ள 3 மர ஆலைகள் உள்ளிட்ட களஞ்சிய சாலைகள் இவ்வாறு இன்று (13) அதிகாலை தீ காரணமாக நாசமாகியுள்ளது.
சம்பவம் அறிந்து ஸ்தலத்திற்கு வருகை தந்த கல்முனை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் மேலும் தீ பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் பெரிய நீலாவணை காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Spread the love