188
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
சுன்னாகம் நகரில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பமான பேரணி சுன்னாகம் பஸ் தரிப்பு நிலையம் வழியாக வாழ்வகத்தை சென்றடைந்தது.
வாழ்வகம் மற்றும் லயன்ஸ் கழகம் ஆகிய இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை நடாத்தியது.
வெள்ளைப் பிரம்பின் முக்கியத்துவம், விழிப்புலனற்றவர்கள் வீதியில் நடமாடுவதற்கு இருக்கின்ற இடையூறுகள், அவர்களை ஏன் முன்னுரிமைப்படுத்த வேண்டும் போன்ற விடயங்கள் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
Spread the love